More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்!
சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்!
Oct 07
சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்!

தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்று தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியி ருந்தோம். இதன்போது எம் இதுவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வருவதனை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.



கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட நுP-டீநுலு 2600 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றே எம்மை பின்தொடர்ந்து வந்தது. இதுதொடர்பில் எமது பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.



பொலிஸ் பொறுப்பதிகாரி அலோக்க பண்டார சிறிது நேரத்திற்கு பின்னர் எங்களது பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புலனாய்வாளர்களே எங்களை பின்தொடர்வதாக தெரிவித்தார். 



இந்த நேரத்தில் எங்கள் இருவர் சார்பிலும் நான் இந்த இடத்தில் முக்கிய கேள்வி ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன். எதிர்கட்சியில் உள்ளவர்களை ஏன் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றனர்.



புலனாய்வாளர்களுக்கு எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார்கள் சைக்கிள்கள் வழங்கப்பட்டன என்கின்ற கேள்வியினையும் நான் முன்வைக்கின்றேன். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளினால் எங்கள் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச

Feb20

 அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர

Apr03

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற

Sep19

வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ

May22

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார

May21

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்

Oct14

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பக

Feb03

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி

Apr30

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்

Sep23

இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்

Mar19

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்

Mar22

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட

Mar09

சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல

Mar30

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (06:25 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (06:25 am )
Testing centres