நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டா க்களும் மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர் மேற்படி துப்பாக்கியை எங்கிருந்து எடுத்து வந்தார்? என்ற கேள்விக்கு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒ
அச்சுவேலி - வளலாயில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ
நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட
