இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறா
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் ஷாருக்கான் சென்னையில் நடந்த படப்பிடிப்பை பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த 30 நாள் படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் ஆழ்ந்து உரையாடியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார்.
மேலும் அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த அனுபவப் பதிவை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
வலிமை வெற்றியை தொடர்ந்து AK 61
நடிகர் அஜித் தமிழ் சினி
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட
உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் தி
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக
