ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு கிடைத்தது என்பது இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் கட்சிப் பிரிவினைகள் இன்றி ஜனரஞ்சகமாக செயற்பட எதிர்பார்க்கும் பின்னணியில்இ தேசிய பேரவை மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர் 'நாடாளுமன்றத்திற்குள் கட்சி அமைப்பிலிருந்து குழுக்கள் உருவாகியுள்ளன.
ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நான் ஜனாதிபதியானேன் என்பது இரகசியமல்ல. ஒரு சிறுபான்மையினர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சென்றனர். எனக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைத்தது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர்.
எங்களுடைய குறுகிய கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் செய்துகாட்ட விரும்புகிறேன். அதன்படி செயற்படுங்கள்.
தற்போதுஇ கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றத்தில் தேசிய பேரவை நிறுவப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏனைய சபைகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் இவற்றை நிரப்ப முடியவில்லை. சிலர் தேசிய பேரவையில் இணைகின்றனர். மற்றவர்கள் வருவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந
அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்
இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
