பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தாம் தயார் என்றும் அதற்காகவே தொகுதி மட்டத்தில் கூட்டங்களும் இடம்பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது.
சிலர் உண்மையாகவே 'சிஸ்டம் சேன்ஞ்'க்காக போராடினர். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர்.
இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்று எம்மை கள்ளன் என்றனர். போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம்.
ஆனால் இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடவில்லை. 'கள்ளன்', 'கள்ளன்' என கோஷம் எழுப்புகின்றனர். இவ்வாறு கூக்குரல் எழுப்புவதைவிட சட்ட நடவடிக்கை எடுப்பதே மேலானது.
ராஜபக்சவிடம் கறுப்பு பணம் உள்ளது என கூறியவர்கள் கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்' என்றார்.
கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள
வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்
