தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.
இலங்கை தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி. புலக்ஷன், சசிக்குமார்,கணுவியா, சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.
தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் திட்டிலிருந்து இலங்கைத் தமிழர்களை ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு சென்று ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடà
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்à
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவà¯
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தà
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான à®
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டà¯
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதிà®
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பகà
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (à®
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நà
