கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு இரு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் அதிபர் யோவெரி முசிவேனி முபேந்தே மற்றும் கசன்டா ஆகிய நகரங்களில் மூன்று வாரம் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த நகரங்களில் வழிபாட்டுத் தலங்கள் மதுபானக்கடைகள் இரவு விடுதிகள் அனைத்தும் மூடப்படுகின்றன.
இதுவரை எபோலோ நோய் தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று போல எபோலாவுக்கு லாக்டவுன் தேவைப்படாது என அதிபர் முசிவேனி சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
ஆனால் தொற்று தற்போது தீவிரத்துடன் பரவுவதால் வேறு வழியின்றி இரு முக்கிய நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மற்றொரு அண்டை நாடான காங்கோவிலும் எபோலா பரவலுக்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளில் 2013 - 2017 காலகட்டத்தில் எபோலா தீவிரமாக பரவி 11,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி
ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்ட
உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில்
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள