இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான மருந்து திரவங்கள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லை என்று தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளை கருத்திற்கொண்டு உயர்தர மருந்துகளை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் காம்பியாவில் ஒரு வகை இருமல் மருந்து காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. பின்னர் இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால் சுமார் நூறு குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசிய அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிரப் ஒன்றில் சிறுநீரகத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மருந்தைப் பெற்ற 200 குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
காலி - கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்த
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆர
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
