மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரமணாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளில் நான்கு வான்கதவுகள் இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டதுடன், வினாடிக்கு 200 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.
இந்த பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் எஞ்சிய வான் கதவுகளும் திறக்கப்படும் என்பதால்இ மேல் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு கீழே கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு உதவிப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை தொடரும் மழை காரணமாக அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சென் கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீரும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.
கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல
கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
