மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதே நாளில் 3 மாகாணப் பேரவைகளுக்கான தேர்தலும் நடத்தப்படும்.
மலேசியாவில் ஆளும் கூட்டணியின் இடைக்கால அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், புதிதாக தேர்தல் நடத்தி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக பிரதமர் சாப்ரி யாகூப் கடந்த 10ஆம் திகதி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கமைய தற்போது இந்த பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை நவம்பர் 5ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். பொதுத் தேர்தலில் வாக்களிக்க 2.2 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரஷாக் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதிய
உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப
உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ
உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்ல
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு
