இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிணைப்பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமான படகை இடைமறிக்க முயன்ற போது இந்திய கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் தமிழக கடற்றொழிலாளர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தமிழக அரசாங்கம், இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
காயமடைந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.
இந்தநிலையில் வீரவேலுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகின்ற நிலையில் இந்திய படையினரின் இந்த செயல் இந்திய கடற்றொழிலாளர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
சசிகலா த
பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1'
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த
