ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைன் பகுதியில் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யாவில் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளார். மேலும் நேட்டோவை எதிர்வினையாற்றுவதற்கு உக்ரைனில் உள்ள ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த நடவடிக்கை நாட்டின் தென் பகுதி முழுவதும் பேரழிவு தரும் வெள்ளத்தைத் தூண்டும் என எச்சரித்து இருந்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் நிலத்திற்கு அடியில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் நிலத்தடி மருத்துவமனைகளை கட்டுவதன் மூலமும், நாட்டின் ராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்புகளை அதிகரிப்பதன் மூலமும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுடன் போருக்குத் தயாராகிறார் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இராணுவ நடவடிக்கை தொ
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வ
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக
