தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போல் பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், 'நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும் கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதியுடன் உரையாடினோம்.
பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐஜிக்கு பணிப்பதாக ஐனாதிபதி கூறினார். தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்பட்டதை போல் பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி கூறினார்.
அருகிலிருந்த பிரதமர் மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, யோகராஜன் ஆகியோரும் சாதகமான கருத்துக்களை பகிர்ந்தனர்.
மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.
பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51 வீத உணவின்மை பிரச்சினை காணப்படுகிறது என கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்க கோரினேன். ஜனாதிபதி கொள்கைரீதியாக உடன்பட்டார்' என மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்க
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச
கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
