முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றுள் தமிழ் மக்களின் வரலாற்று தொன்மைமிகு குருந்தூர்மலை, வெடுக்குநாரி ஆலயம் தொடர்பான விவகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த இரண்டு அமைச்சர்களும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே திருகோணேஸ்வர ஆலயத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் நேரடியாக சென்று, ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினை சம்மந்தப்பட்ட தரப்புக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. –
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பி
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் நேற்று மாலை 5.27 மணி முத
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
