உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் இன்று தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 மாதங்கள் கடந்து மந்த நிலையை அடைந்துள்ள உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், யாரும் எதிர்பாராத நேரம் ரஷ்ய ராணுவம் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று ரஷ்ய ராணுவம் 120க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனிய நகரங்கள் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனுக்குள் நுழைந்த பெரும்பாலான ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தள்ளனர்.
உக்ரைனிய ஜனாதிபதியின் அலுவலக ஆலோசகர் Oleksiy Arestovych முகபுத்தகத்தில் எழுதியுள்ள குறிப்பில், 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பல அலைகளில் உக்ரைனுக்குள் வருகின்றன,மேலும் நாடு முழுவதும் வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகள் கேட்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு சாத்தியமான சேதத்தை குறைக்கும் நோக்கில் ஒடெசா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் நிருபர் மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் இன்றைய ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு
மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரேசன் பொருட்களை கள்ளச்சந
