மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான மீனாட்சிக்கு முதல்வர் மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். இந்த திட்டத்தின் சேவையை மேலும் மேம்படுத்திட 10,969 பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் 15,366 அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு இரத்த அழுத்தம் கண்டறியும் டிஜிடல் இரத்த அழுத்த கருவிகளை முதல்வர் வழங்கினார். மேலும், மு.க.ஸ்டாலின், 12கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்
கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோ
டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட
பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
