More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
Jan 02
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா  2023ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளை மிரட்டியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை வடகொரியா கடைபிடித்து வருகிறது.  பல நாடுகளின் எதிர்ப்பை எல்லாம்  கண்டுகொள்ளாத வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். இதனால் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்தது.



அமெரிக்காவின் பொருளாதார தடையால் வடகொரியா கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. எந்த விஷயம் பற்றியும்  கவலைப்படாத வடகொரிய அதிபர் கிம், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார்.  கடந்த ஆண்டு வடகொரியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 70க்கும் மேற்பட ஏவுகணைகளை சோதித்து உள்ளது.



அதிலும், அமெரிக்கா வரையிலும் சென்று தாக்கக் கூடிய தொலை தூர ஏவுகணையை சோதனை செய்து அதிர வைத்தது.2022ம்  ஆண்டின் கடைசி நாளான நேற்றுமுன்தினம் 3 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து சோதித்தது. இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்றும் வடகொரியா  ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2. 50 மணி அளவில் பியோங் யாங்கில் இருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியதாக தென்கொரியா கூட்டு படையினர் தெரிவித்து உள்ளனர்.



பாக்ஸ் அணு ஆயுதங்கள் அதிகளவில் தயாரிப்பு

ஏவுகணை சோதனைக்கு பின் நடந்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கிம் ஜோங் பங்கேற்றார். கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென் கொரியா, ஜப்பானுடன் இணைந்து நேட்டோ போன்ற  ராணுவ ஒத்துழைப்பை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.வட கொரியாவுடன் மோதலில் ஈடுபடும் விதமாக தென் கொரியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இதனால் நாட்டில் அணு ஆயுதங்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும்.  பகைமை நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும்  வட கொரியாவின் நலனை பாதுகாக்கும் வகையில் ராணுவ பலம் இருமடங்காக அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

 உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு

Feb19

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகà

Jun29

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குà

Jun06

 ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள் à®

Aug09

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரà

Jun12

 அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நிலà

Mar25

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்

Apr30

மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற

Dec29

 ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட

Mar10

மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்டà

Feb28

சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போதà

Mar16

இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பணà

Apr04

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலà¯

Mar25

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கà

May04

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொருà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:30 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:30 am )
Testing centres