ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக். 16ம் தேதி தொடங்கி நவ. 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. மொத்தம் 15 பேர் அடங்கிய அணியில் துஷ்மந்த சமீரா, லாகிரு குமாரா இடம் பெற்றுள்ளனர். காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர்கள், விரைவில் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், உலக கோப்பையில் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. அக். 16ம் தேதி தெற்கு கீலாங் மைதானத்தில் நடக்க உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபா அணியுடன் மோதுகிறது. இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்ச, சமிகா கருணரத்னே, தனுஷ்கா குணதிலகா, தனஞ்ஜெயா டிசில்வா, துஷ்மந்த சமீரா, பதும் நிஸங்கா, வனிந்து ஹசரங்கா, லாகிரு குமாரா, குசால் மெண்டிஸ், மகீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா, சரித் அசலங்கா, ஜெப்ரி வாண்டர்சே, பிரமோத் மதுஷன்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற