சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து சீனாவின் சோங்கிங் நகரத்திற்கு சென்ற நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
குறித்த நபர் உட்பட சில பயணிகள் விமான நிலையம் வந்ததும் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
அப்போது அவருக்கு உடலில் தோல் அரிப்பு போன்ற பாதிப்பு உண்டானது. பின் அந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
சோங்கிங் நகருக்கு வந்தவுடன் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டதால் வைரஸ் பரவும் ஆபத்து குறைவாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
குரங்கு அம்மை சுமார் 90 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த குரங்கு அம்மை நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனவும் உலக சுகாதார அவசரநிலையாகவும் கருத்திற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண
இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்க அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன் வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதுடைய மலர்விழி என் வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த, கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத
