More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!
மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!
Sep 20
மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற நிலையில் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேர் இன்று காலை இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.



இவர்கள் அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.



தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.



தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும் காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில்; தங்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பத்திரமாக மீட்டதாகவும் அகதிகள் தெரிவித்தனர்.



பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுகà¯

Mar12

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு

Jul15

நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அà®

Jul19

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்னà¯

Feb02

தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

Apr01

நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியà

Mar13

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப

Jan29

 அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்

Sep15

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அà

Mar24

மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம

Mar17

நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செà

Feb02

இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்à

Dec27

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர

May12

நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் நà®

Feb14

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தà¯

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:42 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:42 am )
Testing centres