மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சட்டத்தை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பல பரிந்துரைகள் சட்ட வரைவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டம் தொடர்பான சில பரிந்துரைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது ஆலோசித்து வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மாத்திரமே காலாவதியாகும் எனவும் அதற்கு முன்னதாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
வவுனியா சுற்றுலாமைய விடயத்தில் நகரசபையின் குத்தகை ஒப
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
