தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்
கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக நினைவுகூருவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அவர் இனத்தின் அடையாளம் என்ற படியால் அவர் மக்களுக்கு சொந்தமானவர்.
ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி மற்றும் அமைப்புகள் சாராமல் பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள குழுவே இம்முறை மேற்கோள்ளும்.
நினைவேந்தல் இடம் மாநகர சபை எல்லைக்குள் இருக்கிறது. ஆகவே அதற்கான வழிமுறைகளை மாநகர சபை என்ற ரீதியில் கூறுவது சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
நினைவு தினமன்று கவி அரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர சில தரப்புக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள விட மாட்டார்கள். குழப்புவார்கள். எனவே இம்முறையும் குழப்பம் வரலாம். அதற்கான வேலைகளை அரசு தரப்பு மேற்கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் உள்ள அரசு வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசு குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளது.
இவற்றை எல்லாம் கடந்து எழுச்சியாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளுவோம்.- என்றார்.
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அர
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்
