பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அமைச்சர் அவர் கூறினார்.
இந்த விடயம் குறித்து சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் 'இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு தொழில்தருநர்களையும் வணிகங்களையும் மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வமுள்ள முதலாளிகள் அமைச்சின் புலம்பெயர்ந்த தொழிலாளர் முகாமைத்துவ நிலையத்திற்கு oscksm@mohr.gov.my அல்லது நாட்டின் பணியாளர்கள் திணைக்களத்திற்கு jtksm@mohr.gov.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை
அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப் 2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
