பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 12(1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
சிபாரிசுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முரண்பாடுகள் நிறுத்தப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெட்ரோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெட்ரோலிய இறக்குமதிக்கு முறையாக அடையாளம் காணப்பட்ட தரப்பினர்களுக்கு உரிமம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
இன்று இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான உத்தரவுகள் விவாதத்தின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை திருத்துவது தொடர்பான பரிந்துரைகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோ
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
