அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடன் பெறுவதற்கும் குறைந்த வரி செலுத்துவதற்கும் ரியல் எஸ்டேட் மதிப்பு குறித்து பில்லியன் கணக்கில் ட்ரம்ப்இ பொய் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2011-21ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ட்ரம்ப் அமைப்பு ஏராளமான மோசடி செயல்களை செய்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், ட்ரம்ப் இந்த வழக்கை மற்றொரு சூனிய வேட்டை எனக்கூறி நிராகரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் மூத்த குழந்தைகளான டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரும் ட்ரம்ப் அமைப்பின் இரண்டு நிர்வாகிகளான ஆலன் வெய்சல்பெர்க் மற்றும் ஜெஃப்ரி மெக்கனி ஆகியோருடன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.
மூன்று வருட சிவில் விசாரணைக்குப் பிறகு மாநிலத்தின் மூத்த வழக்கறிஞரான நியூயோர்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.
கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்யும் அதிகாரம் அவரது அலுவலகத்திற்கு இல்லை. ஆனால் கிரிமினல் தவறுகள் பற்றிய குற்றச்சாட்டுகளை மத்திய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் உள்நாட்டு வருவாய் சேவையிடம் குறிப்பிடுகிறது.
327 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள ட்ரம்ப் டவரில் உள்ள ட்ரம்பின் சொந்த அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்புகள் தவறாகக் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களில் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்
ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தே
இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக
ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப
அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
