உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடர்களின் இறுதிப் போட்டிகள் லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லோட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அந்த இரு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களையும் இங்கிலாந்தில் நடத்துவதென கடந்த ஜூலையில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவற்றின் இறுதி போட்டிகளுக்கான இடங்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஒகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
தற்போது வரையிலான புள்ளிகள் பட்டியலில் அவுஸ்ரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.
இதேவேளை கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆண்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் ஆரம்பமாகும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐந்து டெஸ்டுகளில் கடைசி போட்டி ஜூலை 27ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடையில் லோர்ட்ஸ், ஹெடிங்லி மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்ட் ஆகியவை மூன்று போட்டிகளை நடத்துகின்றன.
இதற்கிடையில் பெண்கள் ஆஷஸ் ஜூன் 22ஆம் திகதி டிரென்ட் பிரிட்ஜில் ஒரு ஐந்து நாள் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய
இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கில
இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
