More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா – இலங்கை பேச்சு!
கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா – இலங்கை பேச்சு!
Sep 23
கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா – இலங்கை பேச்சு!

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்துள்ளன.



பிரதமர் தினேஷ் குணவர்தன இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.



அலரிமாளிகையில் நேற்று  இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இந்த சந்திப்பின்போது ​​கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்தி நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.



சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், புகையிரதங்களின் கூட்டுத் திட்டங்கள், விவசாயம் மற்றும் மீன்பிடி அபிவிருத்திக்கான உதவிகள் உட்பட எரிசக்தி துறையில் அதிக இந்திய முதலீடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் இதன்போது விவாதித்தனர்.



இலங்கைக்கான பொருத்தமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தைப் பெறுவதற்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.



அபிவிருத்தியின் அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திறன்களில் பிரதமரின் வழிகாட்டுதலுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.



இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் எல்டோஸ் மேத்யூஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சேà

Mar09

7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா à

Feb01

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி

Mar12

இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத விà

Jan15

அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்à®

Jan12

 ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக

Jul17

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்தà®

Aug24

வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்à®

Sep21

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய

Sep12

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களà¯

Jan21

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவà®

Apr19

வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகà

May17

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பà

Sep27

கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயà

Jun08

எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (07:46 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (07:46 am )
Testing centres