சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் விமர்சனங்களை கருத்தில் எடுக்கப்போவதில்லை என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தன்னை பற்றி வெளியாகியுள்ள முகநூல் பதிவுகள் குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர்இ எவரும் கேலிசெய்யலாம் விமர்சிக்கலாம் அவர்களை பற்றி யாருக்கு கவலை என தெரிவித்துள்ளார்.
போதியளவிற்கு விமர்சித்துவிட்டோம் கேலி செய்துவிட்டோம் என அவர்கள் நினைக்கும்போது அவர்கள் அதனை நிறுத்திவிடுவார்கள் என குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர் இந்த நாட்டின் மக்களிற்கு விமர்சனத்துடன் கேலி செய்ய மாத்திரம்தான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் மக்களிற்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ள ஞானசார தேரர் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்டதை விமர்சித்து கேலியான பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அவரை அழைத்தமை நாட்டின் முஸ்லீம்களை அவமரியாதை செய்தமைக்கு சமமானது என முகநூலில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்து
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த
நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொ
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ம
ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே
இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
