தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார் என்றும் பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர்,அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதன்படி, டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ், திஸ்ஸ விதாரன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்சஎ உதய கம்மன்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரோஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரட்ன, சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இந்த சபையில் செயற்படுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டலஸ் அழகப்பெரும அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு
இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
