கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயர்பாதுகாப்பு வலயங்கள் வர்த்தகங்களுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் புதிய மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நிபுணர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்
வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
