கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் சுமார் 300 பேர் அளவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மக்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடமைப்புத் தொகுதிகளில் இருந்து வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவு இன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள
நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் வில
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
