பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க, மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியமைக்காக விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட தேச
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்
கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 ப
தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப
வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 ப
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
