கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், கண்டி பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பெண்கள் விடுதிக்குள் இரகசியமாக ஐந்து மாணவர்கள் நுழைந்ததாகவும் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் போதே மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாணவிகளின் சம்மதத்துடனேயே மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதாகவும் அவர்களின் தலைமுடி கூட வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதி காப்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மார்ச் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
