அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
அந்தப் பொருட்களை வாங்க ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் உள்பட பலர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர்.
மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவன நிர்வாகிகளை கைது செய்தனர்.
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் ப
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி
"நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செய
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
