மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் செங்கலடி - ஐயங்கேணி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய க.திபாகர் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
21 வயதுடைய இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 10 வயது சிறுவன் அடங்களாக 4 பேர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கலடி பகுதியில் இருந்து கொம்மாதுறை பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர் - அருகே வந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது தொடராக மோதியுள்ளனர்.
இதன் போது சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் வந்த 28 வயதான இளைஞன் உயிரிழந்துடன் ஏனையவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும்
