பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியின் முகத்தில் தந்தையொருவர் ரைஸ் குக்கரின் மூடியால் சூடு வைத்துள்ளதாக முறைப்பாடு பதிவாகி உள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்காயங்களுடன் நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு, பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபரான தந்தை இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, “ஏன் இவ்வளவு சாதம் சமைக்கிறாய்?” எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன
நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்
நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இ
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ
