எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் விவசாய நிலம் ஒன்றில் பாதியளவில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய எத்கந்துர பிரதேசத்தில் வசிக்கும் சந்த குமார சரத்குமார என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறித்த இளைஞன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த இளைஞனின் நெருங்கிய நண்பன் என கூறப்படும் 40 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இளைஞனின் உடல் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் அவரது பணப்பையையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
