அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை 18 ஜனவரியன்று காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்கிறார்.குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘துரித மக்கள் போக்குவரத்து அமைப்பை’ இந்நகரங்களுக்கு இந்த மெட்ரோ திட்டங்கள் வழங்கும்.
அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் குறித்து:
28.25 கி.மீ நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன் அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் அமையும். மொட்டேரா விளையாட்டு அரங்கில் இருந்து மகாத்மா மந்திர் வரை 22.8 கி.மீ நீளத்துக்கு முதல் வழித்தடம் அமைக்கப்படும். ஜி என் எல் யூ-வில் இருந்து கிஃப்ட் சிட்டி வரை 5.4 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் வழித்தடம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ 5,384 கோடி ஆகும்
சூரத் மெட்ரோ ரயில் குறித்து
40.35 கி.மீ நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன் சூரத் மெட்ரோ ரயில் திட்டம் அமையும். சர்தானாவில் இருந்து டிரீம் சிட்டி வரை 21.61 கி.மீ நீளத்துக்கு முதல் வழித்தடம் அமைக்கப்படும். பேசனில் இருந்து சரோலி வரை 18.74 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் வழித்தடம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ 12,020 கோடி ஆகும்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப
சென்னையில் அனைவருக்கும்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை