மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. இன்று காலை 7.45 மணயளவில் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது, ரெயிலின் பார்சல் பெட்டியில் தீப்பிடித்து அதில் இருந்து புகை வெளியேறுவதை பயணிகள் சிலர் கவனித்தனர். உடனடியாக செயினைப் பிடித்து ரெயிலை நிறுத்தினர். வர்கலா அருகே ரெயில் நின்றது. தீ விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். தீ சிறிது நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. தீப்பிடித்த பார்சல் பெட்டி அகற்றப்பட்டது.
தீப்பிடித்ததை பயணிகள் உடனடியாக கண்டுபிடித்து ரெயிலை நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பார்சல் பெட்டியின் முன்பகுதியில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் கருகி உள்ளன. மேலும் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன. சேதம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண
* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண
இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற
தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப
மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட
இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்