ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார். அவரை நாடு கடத்தும் உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து தப்பிச்சென்றார். அதற்கு முன்பு, 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், நவம்பர் மாதமும் அவருக்கு எதிராக தேடப்படும் நோட்டீசுகளை சி.பி.ஐ. வெளியிட்டது.
முதல் நோட்டீசில், விஜய் மல்லையா தப்ப முயன்றால் சிறைபிடிக்குமாறும், 2-வது நோட்டீசில் அவரது நடமாட்டம் பற்றி தகவல் தெரிவித்தால் போதும் என்றும் விமான நிலையங்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த 2 வெவ்வேறு நோட்டீசுகளும் எந்த விதியின் கீழ் வெளியிடப்பட்டது என்று சி.பி.ஐ.யிடம் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த விகார் துர்வே என்ற தகவல் உரிமை சட்ட ஆர்வலர் விண்ணப்பித்தார். ஆனால், அந்த தகவலை அளிக்க சி.பி.ஐ. மறுத்து விட்டது. இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்திடம் விகார் துர்வே விண்ணப்பித்தார். அவர் கேட்ட தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா
இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020
இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு
இந்தியாவில்
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே& தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய
