More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் ரூ.171 கோடியே 87 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ளது!
பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் ரூ.171 கோடியே 87 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ளது!
Jan 18
பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் ரூ.171 கோடியே 87 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ளது!

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்கும். அந்த வகையில் கடந்த 13-ந் தேதி (போகி பண்டிகை) தமிழகத்தில் ரூ.147 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை ஆகி இருந்தது. அதேபோல், கடந்த 14-ந் தேதி (பொங்கல் தினத்தன்று) 269 கோடியே 43 லட்சத்துக்கு விற்பனை ஆனது.



கடந்த ஆண்டை விட பொங்கல் தினத்தன்று விற்பனை அதிகமாக இருந்தாலும், போகி பண்டிகையை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.30 கோடி வரையில் விற்பனை குறைந்திருந்தது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாட்களையும் சேர்த்து ரூ.417 கோடியே 18 லட்சத்துக்கு இந்த ஆண்டு மது விற்பனை ஆகி இருந்தது.



இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான நேற்று முன்தினம் சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டதால், காணும் பொங்கல் பண்டிகைகளை இழந்து காணப்பட்டது. இருந்தாலும், மது விற்பனையில் எந்த சுணக்கமும் ஏற்படவில்லை.



நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.171 கோடியே 87 லட்சத்துக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. மண்டல வாரியாக பார்க்கையில், சென்னை மண்டலத்தில் ரூ.38 கோடியே 14 லட்சத்துக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.36 கோடியே 12 லட்சத்துக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.32 கோடியே 85 லட்சத்துக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.34 கோடியே 59 லட்சத்துக்கும், கோவை மண்டலத்தில் ரூ.30 கோடியே 17 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் தான் அதிகளவில் மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளன.



கடந்த ஆண்டில் இதே காணும் பொங்கல் தினத்தன்று ரூ.174 கோடியே 89 லட்சத்துக்கு விற்பனை ஆகியிருந்தது. அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, ரூ.3 கோடியே 2 லட்சம் விற்பனை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்à

Sep08

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி

Jan20

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற

Mar08

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்

Aug13

ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உà

May10

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமà

Feb26

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்திà

May03

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது à

Jul03

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி à®

Oct24

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில

Jun21
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (04:06 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (04:06 am )
Testing centres