கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கம்பனிகளும், தொழிற்சங்கங்களும்தான் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன. அரசாங்கத்தால் மூன்றாம் தரப்பாக தலையிடவே முடியும். அந்தவகையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.
கூட்டு ஒப்பந்தம் அநீதியானது என குறிப்பிட்டு தொழிலாளர்களை சிலர் தூண்டிவிடுகின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு நன்மைகளும் உள்ளன.
குறிப்பாக வருடம் 300 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படாவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் கூட்டு ஒப்பந்தம் இல்லையேல், தொழில் அமைச்சரிடம்தான் முறையிடவேண்டிவரும். கம்பனிகள் நினைத்தால் 2 நாட்கள்கூட வேலை வழங்கலாம். அவர்களின் முடிவை சவாலுக்குட்படுத்த முடியாது.
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்வதற்கு நாமும் தயார். ஆனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு, கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களே பொறுப்பு கூறவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத
அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ
இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
