மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு, உயிரிழந்தவர் கடந்த 30ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன் அவர், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந
பெண்களின் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகா
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மற
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க
