கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடுப்பூசிகளில் சினோபார்ம் தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் லட்சக்கணக்கானோர் போட்டுள்ளனர். இதில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முக்கியமானவர் ஆவார்.
இந்த வரிசையில் கம்போடிய பிரதமர் ஹுன்சென்னும் சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். நாட்டிலேயே முதல் நபராக இந்த தடுப்பூசியை அவர் போட்டுள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இன்று நான் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த விவகாரத்தில் நான்தான் முதலில் இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் அதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்' என்று கூறியிருந்தார்.
கம்போடியாவுக்கு நன்கொடையாக சீனா வழங்கியிருக்கும் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை ஏற்பதாக கூறியுள்ள ஹுன்சென், நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த 10 லட்சம் டோஸ்கள் போதாது என்றும், நாட்டில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற
