இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள காசா முனை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தை குறிவைத்து தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஆஸ்டூட் நகர் மீது நேற்று முன்தினம் இரவு ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். எனினும் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி தளம் மற்றும் ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவற்றின் மீது போர் விமானம் குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல்கள் இல்லை.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்
இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி
நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
