தென் கொரியாவின் சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒரு பெரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக லீ ஜெய்-யோங் உள்ளார். சாம்சங் குழுமத்தின் 3-ஆம் தலைமுறை தலைவரான லீ, அவரது தந்தை லீ குன்-ஹீ மரணத்துக்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில், சாம்சுங் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு இணை நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக, முன்னாள் தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹை -வின் கூட்டாளியான சோய் சூன்-சில் என்பவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஜெய்-யோங் 2017-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டது, பின்னர் மேல்முறையீடு செய்ததில் அந்த தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜெய்-யோங்க்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
இந்த தீர்ப்பு இப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால், சாம்சுங் நிறுவனம் அதன் உச்சபட்ச முடிவெடுப்பாளரை தற்காலிகமாக இழந்துள்ளது.
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப
தலிபான்கள்
இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்ய இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொ அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீன மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத