இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானமையை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கடந்த 22 ஆம் திகதி மரணித்தார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானமையை அடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மரணித்தார்.
கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ரணால பகுதியை சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர் நேற்று முன்தினம் மரணித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்று உறுதியானமையை அடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மரணித்தார்.
கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ
கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழ
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
