திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி வீதியில், மட்டிக்களி பகுதியில் வீதியோர மீன் வியாபாரிகளது உடமைகளை நகர சபையினர் கையகப்படுத்தி, அப்பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வியாபாரிகளிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை நகர சபையால் நிதி வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், திடீரென நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கையின் காரணமாக தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் அன்றாடம் நடமாடும் பகுதிகளில் குறித்த வியாபாரத்தினை முன்னெடுத்தால் மாத்திரமே போதிய அளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியுமெனவும் நகர சபையினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் வியாபாரத்தை முன்னெடுத்தால் தமக்கு நஷ்டம் ஏற்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமது பிரச்சினைக்குத் தகுந்த முடிவினைப் பெற்றுத்தருமாறு வீதியோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
கடந்த சில நாட்களில், 87,000 குடும்பங்கள் கட்டணம் செலுத்தா
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விப
