18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசிய சரத் பொன்சேகா, 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்க 75 பில்லியன் ரூபாய் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க போராடும் இளைஞர்களுக்கு இந்த திட்டம் ஊக்கமளிக்கும் என்றாலும், நிதி பற்றாக்குறை மற்றும் தளவாட சிக்கல்கள் திட்டத்தை செயற்படுத்த தடையாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இராணுவப் பயிற்சி அளிக்க இதுபோன்ற நிதியை முதலீடு செய்யும் நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொய்யான அறிக்கைகள் மூலம் மக்களை திசை திருப்புவதற்கு பதிலாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன
கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
