More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக வழங்கிய பிரதமரின் வாக்குறுதி என்னானது? – அநுர கேள்வி!
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக வழங்கிய பிரதமரின் வாக்குறுதி என்னானது? – அநுர கேள்வி!
Jan 21
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக வழங்கிய பிரதமரின் வாக்குறுதி என்னானது? – அநுர கேள்வி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.



மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்மாதம் இறுதியிலாவது ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவு கிடைக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.



நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இதன்போது, தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவு விடயத்தில், இந்த நாடாளுமன்றத்தில் 2020 பெப்ரவரி மாதம், 27/2 இன்கீழ் கேள்வி கேட்ட வேளையில் 2020 மார்ச் மாதத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பிரதமரும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் வாக்குறுதி வழங்கினர்.



தோட்ட கம்பனிகளின் அனுமதி இருந்தாலும் இல்லாது போனாலும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என பிரதமர் வாக்குறுதி வழங்கினார்.



எமது நாட்டில் சம்பிரதாயம் ஒன்றும் உள்ளது என்னவெனின் பிணத்திற்கு முன்னாள் வாக்குறுதி ஒன்றினை வழங்குவது சத்தியபிரமாணம் செய்வதற்கு சமமானது.



அவ்வாறே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்னாள் நின்றுகொண்டு பிரதமர் மக்களுக்கு சத்தியம் செய்தார்.



தொண்டமான் என்னை இறுதியாக சந்தித்த வேளையில் ஆயிரம் ரூபாய் குறித்தே பேசினார் எனவும் பிரதமர் கூறினார். அதன் பின்னரும் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது.



ஆனால் இன்றுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பொய்யான வாக்குறுதிகளாகவே மாற்றப்பட்டு வருகின்றது.



இந்த மாதம் இறுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்குமா என அரசாங்கத்தை கேட்கிறேன்” அவர் மேலும் தெரிவித்தார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையà

Sep26

இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்

Apr16

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக

Apr24

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களà

Jul25

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு

May02

கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொà

Oct23

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் à

Oct20

சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்à®

Oct03

மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா நà®

May10

இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்கà®

Jun02

கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைகà

Jun21

நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு

Sep21

அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுà®

Mar30

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜினà¯

Sep22

உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (08:37 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (08:37 am )
Testing centres